Enable Javscript for better performance
தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

    By  காஞ்சிபுரம்,  |   Published on : 15th April 2016 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
     காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், யாதோத்காரி பெருமாள் கோயில், குமரகோட்டம் முருகன் கோயில் ஆகிய கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
     இக் கோயில்களில் காலையில் இருந்தே 100-க்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
     செங்கல்பட்டில்...
     தமிழ்ப் புத்தாண்டையொட்டி செங்கல்பட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
     சக்தி விநாயகர் கோயில், எல்லையம்மன் கோயில், ரத்தின விநாயகர் கோயில், திரெளபதி அம்மன் கோயில், செங்கழுநீர் விநாயகர் கோயில், திருவடிசூலம் கருமாரியம்மன் கோயில், ஞானபுரீஸ்வரர் கோயில், மகா பைரவர் கோயில், திருப்போரூர் கந்தசாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
     செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் வியாகரபுரீஸ்வரர் கோயில், காட்டுநாயக்கன்பாளையம், புதுஏரி செம்மலை முருகன் கோயில், வல்லம் குடைவரைக் கோயிலான வேதாந்தேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
     மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயில், மல்லீகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயிலில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ்ப் புத்தாண்டையொட்டி இக் கோயில்களில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai