Enable Javscript for better performance
திருத்தணி முருகன் கோயிலில் 1,008 பால்குட ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி முருகன் கோயிலில் 1,008 பால்குட ஊர்வலம்

    By  திருத்தணி,  |   Published on : 15th April 2016 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    42

    தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற 1,008 பால்குட அபிஷேக விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
     ஆறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும், திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை முதல் நாளையொட்டி, நள்ளிரவு 12.01 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு தங்க கிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதக் கல், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை
     நடைபெற்றது.
     காலை 8 மணிக்கு, கோட்ட ஆறுமுக சுவாமி கோயில் வளாகத்தில் இருந்து, 1,008 பால்குட ஊர்வலத்தை, அரக்கோணம் தொகுதி எம்.பி. திருத்தணி கோ.அரி தொடக்கி வைத்தார். ஊர்வலம் பெரிய தெரு, பழைய பஜார் தெரு, ஜோதிசுவாமி கோயில் தெரு, ம.பொ.சி.சாலை, மடம் தெரு வழியாக மலைக் கோயிலை வந்தடைந்தது.
     அதைத்தொடர்ந்து காவடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் முருகப் பெருமானுக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. மூலவர், சண்முகர், ஆபத்சகாய விநாயகர், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சித்திரை பிரம்மோற்சவ விழாவில் சிம்ம வாகனத்தில் மலைக்கோயிலை ஒரு முறை வளம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
     அதேபோல் முருகன் கோயிலின் உப கோயிலான மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயிலிலும் 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
     விழாவில் திருத்தணி முருகன் கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் நா.புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai