Enable Javscript for better performance
நண்பகலில் வெயிலில் செல்ல வேண்டாம்: காஞ்சிபுரம் ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    நண்பகலில் வெயிலில் செல்ல வேண்டாம்: காஞ்சிபுரம் ஆட்சியர்

    By  காஞ்சிபுரம்,  |   Published on : 15th April 2016 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நண்பகலில் வெயிலில் செல்வதைப் பொதுமக்கள் தவிர்க்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
     இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிக வெயிலின் தாக்கம் ஏற்படலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தங்களைக் காத்துக்கொள்ள நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதைத்
     தவிர்க்கவும்.
     இந்த நேரத்தில் அதிக அளவில் களைப்படைய வைக்கும் பணிகளைச் செய்ய வேண்டாம், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். காற்றோட்டமான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.
     தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வெளியே செல்ல நேரும்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். தலை, கழுத்து, கை கால்களைச் சிறிது ஈரமான துணியினால் மூடிச் செல்ல வேண்டும். தொப்பி, குடை எடுத்துச் செல்ல வேண்டும். களைப்பாக உணரும் பட்சத்தில் தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
     தேநீர், காபி போன்றவற்றைத் தவிர்த்து மோர், கஞ்சி, பழச்சாறு ஆகிய பானங்களை அருந்த வேண்டும்.
     வெயிலினால் சோர்வு, உடல் நலக்குறைவு ஏற்படும் நிலையில் மருத்துவர்களை உடனே அணுகவும். கால்நடைகளை நிழலான இடத்தில் தங்க வைப்பதோடு, அவற்றுக்கு அடிக்கடி தண்ணீரும் வழங்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai