Enable Javscript for better performance
விஜய் ரசிகர்கள் ரகளை: போலீஸ் தடியடி- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரத்தில் விஜய் நடித்து வெளிவர இருந்த "தெறி' திரைப்படம் வெளியிடப்படாது என்று தகவல் பரவியதைத் தொடர்ந்து பாபு திரையரங்கம் அருகே விஜய் ரசிகர்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

     காஞ்சிபுரத்தில் "தெறி' திரைப்படம், பட விநியோகஸ்தருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வெளியிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து திரையரங்கம் அருகே கூடிய விஜய் ரசிகர்கள் திடீரென்று ரகளையில் ஈடுபட்டனர்.

     சாலையில் செல்பவர்களை எல்லாம் தாக்க முயன்றனர். இதன் காரணமாக பாபு திரையரங்கில் இரவு 2-வது காட்சி நிறுத்தப்பட்டது.

     தகவல் அறிந்து வந்த போலீஸார், பேச்சு நடத்தினர். ஆனால், மது போதையில் இருந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai