Enable Javscript for better performance
ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பூந்தமல்லி அருகே நடந்து சென்ற தனியார் பள்ளி ஆசிரியையிடம் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனர்.

    பெருங்குடியைச் சேர்ந்தவர் டேவிட்ராஜ். இவரது மனைவி விஜிலா (42), தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பூந்தமல்லியில் உள்ள இவரது தாய் வீட்டுக்கு வந்தவர், அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றனர்.

    பூந்தமல்லியை அடுத்த கல்லறை பேருந்து நிறுத்தம், குயின் விக்டோரியா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் விஜிலாவின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இது குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் விஜிலா புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீலார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai