Enable Javscript for better performance
மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு சாவு- Dinamani

சுடச்சுட

    

    மதுராந்தகத்தை அடுத்த கடலூர் கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு இறந்தது.

    கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன் (40). இவருக்குச் சொந்தமான பசு மாடு நிலத்தில் புற்களை மேய்ந்துவிட்டு சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து மாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து மாடு இறந்தது.

    தகவல் அறிந்து கூவத்தூர் கால்நடை மருத்துவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து கூவத்தூர் காவல் நிலையத்தில் நாகப்பன் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai