Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    
    govt--school

    கண்காட்சியில் படைப்புகளை பார்வையிடும் மாணவ, மாணவிகள்.

    மதுராந்தகத்தை அடுத்த குருகுலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அப்துல் கலாம் பிறந்தநாளான இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு நடைபெற்ற இக் காண்காட்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திருக்குமரன் தலைமை வகித்தார். மதுராந்தகம் நகரமன்றத் தலைவர் மலர்விழிகுமார் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில், 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்கள் சுமார் 35 படைப்புகளை பார்வைக்கு வைத்தனர்.
    குருகுலம் சுற்றியுள்ள பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai