Enable Javscript for better performance
இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.3 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மொளச்சூரில் இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சுங்குவார்சத்திரத்தை அடுத்த திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து வெள்ளிக்கிழமை ரூ.3 லட்சம் பணத்தைப் பெற்றார். பின்னர், அதனை தனது இருசக்கர வாகனத்தின் இருக்கையின் கீழ் உள்ள பெட்டியில் வைத்துக்கொண்டு மொளச்சூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர், திரும்பிவந்து பார்த்தபோது வாகனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3 லட்சம் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    இதுகுறித்து, சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் திருட்டு: படப்பையை அடுத்த செரப்பனஞ்சேரி ஊராட்சிக்கு உள்பட்ட நாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் ஆச்சாரி. இவரும் இவரது மனைவியும் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். இந்நிலையில் பகலில் சங்கர் ஆச்சாரியின் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம், நகை அடகு வைத்த சீட்டுகளை திருடிச்சென்றனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai