Enable Javscript for better performance
சர்வதேச பேரிடர் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    
    police

    பேரணியில் பங்கேற்ற ஆட்சியர் இரா.கஜலட்சுமி, காவல் கண்காணிப்பாளர் முத்தரசி உள்ளிட்டோர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் சர்வதேச பேரிடர் தணிக்கும் நாளை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
    இதில் பள்ளி மாணவர்கள் 300 பேர் பங்கேற்று, தேரடியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அண்ணா காவல் அரங்கம் வரை பேரணி சென்றனர்.
    அப்போது, இயற்கை பேரிடர் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டும் ஊர்வலமாகச் சென்றனர்.
    இதைத்தொடர்ந்து, பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.
    பின்னர், இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர் சார்பில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செளரிராஜன், காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, சார் ஆட்சியர் அருண்தம்புராஜ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பர்கத்பேகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் மனோகரன், வட்டாட்சியர் கியூரி உள்பட பலர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai