Enable Javscript for better performance
பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேண்டுகோள்

    By DIN  |   Published on : 15th October 2016 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இயற்கை பேரிடர்களின்போது பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் பெற பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி அறிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள, கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது.
    நடப்பு சம்பா பருவ நெற்பயிருக்கு காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவீதம் பிரிமீயத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். எஞ்சிய பிரீமியத் தொகையை மத்திய, மாநில அரசுகள் ஏற்கும்.
    நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கான காப்பீட்டுத்தொகை ரூ. 23,500. இதற்கு மொத்த பிரீமியத் தொகை ரூ. 1,699. இதில், விவசாயிகள் ரூ. 353 செலுத்தினால் போதும். மீதம் உள்ள தொகையை மத்திய மாநில அரசுகள் செலுத்தும்.
    அதேபோல், உளுந்து, பாசிப்பயிறு போன்றவற்றுக்கு ரூ.180-ம், நிலக்கடலை பயிருக்கு ரூ.195-ம் செலுத்த வேண்டும்.
    வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் வங்கிகளில் பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் கட்டாயமாக சேர்க்கப்படுவர்.
    கடன் பெறாத விவசாயிகள் தங்களது பங்கு பிரீமியத் தொகையுடன், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய பயிர் சாகுபடி ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ செலுத்தி காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
    இந்தத் திட்டத்தின்படி பயிர் விதைக்க, நடவு செய்ய இயலாத சூழ்நிலை, விதைப்பு செய்த பின் முளைத்து கருகிய நிலை, வறட்சி பயிர் வளர்ச்சி நிலையில் பாதிப்பு, பேரிடர் பாதிப்பு மற்றும் அறுவடைக்குப் பின் விளைபொருள் பாதிப்பு ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டு, காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
    நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிருக்கான காப்பீட்டுத் தொகைக்கு பிரீமியம் செலுத்த வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 31-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    இதர பயிர்களுக்கு 2017 ஜனவரி 15-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai