Enable Javscript for better performance
புதுவாழ்வுத் திட்ட செயல்பாடுகள்: உலக வங்கி துணைத் தலைவர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    புதுவாழ்வுத் திட்ட செயல்பாடுகள்: உலக வங்கி துணைத் தலைவர் ஆய்வு

    By DIN  |   Published on : 15th October 2016 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    world-bank

    படப்பையில் புதுவாழ்வுத் திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்த உலக வங்கி துணைத் தலைவர் பெட்ரோ அல்பா தலைமையிலான குழுவினர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புதுவாழ்வுத் திட்ட செயல்பாடுகளை, உலக வங்கி துணைத் தலைவர் பெட்ரோ அல்பா தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
    தமிழக அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்களின் முன்னோடி திட்டமாக விளங்கும் புதுவாழ்வுத் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் 26 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம், மக்களே செயல்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், உத்தரமேரூர் ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    இந்நிலையில் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட படப்பை ஊராட்சியில் புதுவாழ்வுத் திட்ட செயல்பாடுகளை உலக வங்கியின் துணைத் தலைவர் பெட்ரோ அல்பா, புதுவாழ்வுத் திட்ட செயல் தலைவர் சமிக்தாஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
    இத்திட்டத்தின் மூலம் இதுவரை 7,630 மாற்றுத்திறனாளிகளுக்கும் 6,054 நலிவுற்றோருக்கும் பல்வேறு வாழ்வாதார உதவிகள், உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 32,436 இளைஞர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்கப்பட்டு, சுய தொழில் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
    ஒரே தொழில் செய்பவர்களை ஒருங்கிணைத்து 323 ஒத்த தொழில் குழுக்கள் தொடங்கப்பட்டு, அவர்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள், சந்தை இணைப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
    மகளிர் சுகாதாரம், உடல் நலத்தை கருத்தில் கொண்டு ரத்த சோகை முகாம் நடத்தப்பட்டு, மருத்துவர்கள் மூலம் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    சுய உதவிக் குழுகளுக்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் இதுவரை 46,447 பேருக்கு 117.83 கோடி கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
    மனநலம் குன்றியோர் 353 பேரும், மனநலம் பாதிக்கப்பட்டோர் 141 பேரும் கண்டறியப்பட்டு, மாதந்தோறும் அவர்களுக்கு தொடர் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 492 பேருக்கு வாழ்வாதார கடன் உதவியும் அளிக்கப்பட்டுள்ளது.
    இத்திட்டத்தை உலக வங்கியின் ஆய்வுக் குழுவினர் பார்வையிட்டு, "கிராமப் பகுதிகளில் உள்ள பெண்கள் சமூகத்தில் பொருளாதார ரீதியாக சிறப்பான அந்தஸ்தை பெற்றுள்ளதாகவும், கல்வி, மருத்துவம், ஆண்-பெண் பாலின பாகுபாடு போன்றவற்றில் போதிய விழிப்புணர்வு பெற்றுள்ளதால் புதுவாழ்வுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது' என்றனர்.
    இதைத்தொடர்ந்து, புதுவாழ்வு திட்டத்தின் மூலம் திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு தாம்பரம் "லீனியா பேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்களிடம் ஆய்வுக் குழுவினர் கலந்துரையாடினர்.
    ஆய்வின்போது, புதுவாழ்வுத் திட்ட இயக்குநர் வே.சாந்தா, கூடுதல் திட்ட இயக்குநர் செல்வராஜ், மாநில வல்லுநர் சக்கரபாணி, காஞ்சிபுரம் மாவட்ட புதுவாழ்வுத் திட்ட மேலாளர் பி.தனசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai