Enable Javscript for better performance
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் செயின் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் செயின் பறிப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடுவாஞ்சேரி அருகே வீட்டில் இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, 6 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
    கூடுவாஞ்சேரி பெருமாட்டுநல்லூர் செல்வி நகரைச் சேர்ந்தவர் பகவதி பெருமாள் மனைவி விஜயா (54). இவர் வியாழக்கிழமை மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வீடு வாடகைக்கு கேட்பது போல் அங்கு வந்த 2 பேர், விஜயாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். இதையடுத்து வீட்டின் உள்ளே சென்ற மர்ம நபர்கள், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, விஜயா அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி, தோடு ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.
    இதேபோல், கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் பிரியா நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த கஜேந்திரன் மனைவி சாந்தி (46). இவர், அண்மையில் அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், சாந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
    இந்த இரு சம்பவங்கள் குறித்த புகார்களின் பேரில் கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மற்றொரு சம்பவத்தில் சிறுவன் உள்பட 2 பேர் கைது: நந்திவரம்-கூடுவாஞ்சேரி லட்சுமி நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ரவி (47). இவர் அப்பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழிமறித்த மர்மநபர்கள், ரவியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.750-ஐ பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
    இதில், வழிப்பறியில் ஈடுபட்டது சென்னை போரூர் கற்பகம்பாள் தெருவைச் சேர்ந்த ஆகாஷ் (22), ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai