Enable Javscript for better performance
மிளகாய் வியாபாரியிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி- Dinamani

சுடச்சுட

    

    உத்தரமேரூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மிளகாய் வியாபாரியை தாக்கி, ரூ.5 லட்சத்தை வழிப்பறி செய்துகொண்டு மர்ம நபர்கள் தப்பியோடினர்.
    சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் ஆதிசேஷய்யா (60). மிளகாய் மண்டி நடத்தி வருகிறார். இவர், காஞ்சிபுரம் பகுதிகளில் வியாபாரிகளுக்கு மிளகாயை மொத்த விற்பனை செய்துவிட்டு, அதற்கான பணத்தை வசூலிக்க வார இறுதி நாள்களில் வந்து செல்வார்.
    இந்நிலையில், காஞ்சிபுரம், செய்யாறு, வந்தவாசி, கொடுங்காலூர், உத்தரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதபூஜைக்கு பல்வேறு வியாபாரிகளுக்கு கொடுத்த மிளகாய் மூட்டைக்கான பணத்தை வசூல் செய்ய ஆதிசேஷய்யா அண்மையில் வந்தார்.
    பின்னர், வசூல் பணம் சுமார் ரூ. 5 லட்சத்தை பையில் வைத்துக்கொண்டு இரவில் உத்தரமேரூரிலிருந்து செங்கல்பட்டு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
    பள்ளியகரம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர், ஆதிசேஷய்யாவின் இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளினர். இதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். அப்போது, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆதிசேஷய்யாவிடம் இருந்த ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
    இதையடுத்து, உத்தரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற ஆதிசேஷய்யா, இதுகுறித்து சாலவாக்கம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai