Enable Javscript for better performance
வணிகர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    
    busines-men

    உண்ணாவிரதத்தில் பேசிய சாமானிய வணிகர்கள் சமூக நலச்சங்க கௌரவத் தலைவர் செல்வமணி.

    செய்யூர் வட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சியில் சாமானிய வணிகர்கள் சமூக நலச்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடப்பாக்கம் பேருந்து நிலையத்தின் முன் வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரதம் நடத்தினர்.
    உண்ணாவிரதத்துக்கு சங்கத் தலைவர் தர்ம தினகரன் தலைமை வகித்தார். கௌரவ தலைவர் கே.செல்வமணி முன்னிலை வகித்தார்.
    இதில், இடைக்கழிநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலம்பரை கோட்டையை சுற்றி உயர்கோபுர மின்விளக்குகள், சுற்றுச்சுவர் கட்ட வேண்டும், பேரூராட்சி பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உண்ணாவிரதத்தில் அபிபுல்லா, நடராஜன், தாஸ், குப்புமீரான், விமல்தாஸ், கோதண்டராமன் உள்பட இடைக்கழிநாடு வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai