Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை,ஒரு லட்சம் ரொக்கம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் திருட்டு

    By DIN  |   Published on : 15th October 2016 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒரகடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒரகடத்தை அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (47). கொத்தனாரான இவர் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டார். இவரது மனைவி, மகளும் நூறு நாள் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ரவிச்சந்திரனின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 17 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருள்கள், ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
    இந்நிலையில், மாலையில் வீட்டுக்கு வந்த ரவிச்சந்திரனின் மனைவி, மகள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது.
    இதுகுறித்த புகாரின்பேரில் ஒரகடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai