கலாமின் கனவை நனவாக்க ஒரு கோடி மரக் கன்றுகள்: நடிகர் விவேக் தகவல்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் ஒரு கோடி மரக் கன்றுகள் நடுவதே இலக்காகும் என நடிகர் விவேக் கூறினார்.
Published on
Updated on
1 min read

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் ஒரு கோடி மரக் கன்றுகள் நடுவதே இலக்காகும் என நடிகர் விவேக் கூறினார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக கிரீன் கலாம் என்ற அமைப்பை நிறுவி நடிகர் விவேக் நடத்தி வருகிறார்.  இந்த அமைப்பின் சார்பில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மரக் கன்று நடுதல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மரக் கன்று வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த
நடிகர் விவேக், மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்களுக்கு இலவச மரக் கன்றுகளை வழங்கி, கிழக்கு கடற்கரை சாலையில் 250 மரக் கன்றுகளை நட்டார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆவார்.

அவருடைய கனவை நனவாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக் கன்று நடுவதே எனது இலக்கு. இதுவரை தமிழகம் முழுவதும் 28 லட்சத்து 73 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.    உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மரக்கன்று நட்டு, அதனை தண்ணீர் ஊற்றி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மரம் வளர்ப்பதினால் உலக வெப்பமயமாதலை தடுக்க முடியும் என்றார்.  

நிகழ்ச்சியில், முன்னாள் மாமல்லபுரம் நகரிய பெருந்தலைவர் மல்லை என்.ஜனார்த்தனம், தனியார் பள்ளி தாளாளர் பி.லியோடோமினிக், மல்லை தமிழ்ச்சங்க ஆலோசகர் ஏ.எச். அப்துல் அமீது, அரசு சிற்பக்கலைக் கல்லூரி முதல்வர் ஜெ.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com