

காஞ்சிபுரத்தில் சைல்டு லைன் 1098 மற்றும் ஹேன்ட் இன் ஹேன்ட் தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சைல்டு லைன் இயக்குநர் சுவாமிநாதன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா பங்கேற்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு ஒட்டு வில்லையை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. குழந்தைத் தொழிலாளர்களைக் கண்டால் 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தால் அவர்கள் மீட்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், ஹேன்ட் இன் ஹேன்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் முத்துபிரகாஷ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டேவிட்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.