

ஆயக்கொளத்தூர் பகுதியில், தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய இலவச தையல் பயிற்சி முகாமில் 100 பெண்களுக்கு தையல் இயந்திரம், 50 பெண்களுக்கு அழகுக் கலை சாதனத்துக்கான பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட செங்காடு மற்றும் ஆயக்கொளத்தூர் பகுதிகளில் வசிக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், கார் உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையும், மதர் ட்ரீ தொண்டு நிறுவனமும் இணைந்து கடந்த ஒரு மாதமாக இலவச தையல் மற்றும் அழுகு கலை பயிற்சியை வழங்கி வந்தது. இப் பயிற்சி முகாம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா ஆயக்கொளத்தூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மதர் ட்ரீ தொண்டு நிறுவனத்தின் தலைவர் கந்தவேல் தலைமை வகித்தார். இதில் கார் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையின் நிர்வாக நிதி அலுவலர் ஹாஜன்ஐலி பங்கேற்று, பயிற்சி பெற்ற 100 பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் 50 பெண்களுக்கு அழகுக் கலை சாதன பொருள்களை வழங்கினார்.
இதில் தொழிற்சாலையின் மனிதவள மேலாளர்கள் முருகவேல், கணேசன், மதர் ட்ரீ தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.