ஜிஎஸ்டி: மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் செங்கல்பட்டில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு தலைமை அஞ்சல் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
செங்கல்பட்டு தலைமை அஞ்சல் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
Updated on
1 min read

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் செங்கல்பட்டில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் அனைத்து வகை பொருள்களுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்படுவதைக் கண்டித்தும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் பல்வேறு காரணங்களைக் காட்டி மாற்றுத் திறனாளிகள் அலைக்கழிப்படுவதைத் தடுக்க வலியுறுத்தியும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு தலைமை அஞ்சல் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.அன்பு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டில் செயல்படும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் அருகே இருபுறமும் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும், அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திட வேண்டும், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகளை பெறும் வகையில் பன்னோக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், அனைத்து வருவாய் கோட்டங்களிலும் கோட்டாட்சியர் தலைமையில் மாதாந்திர குறைதீர் கூட்டங்களை நடத்திட வேண்டும், உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்த அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உடனடியாக அவற்றை வழங்கிட வேண்டும், அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் மாத உதவித் தொகை ரூபாய் ஐந்தாயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.அரிகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் ஏ.கமலக்கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர்ஆர்.தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com