2-ஆவது நாளாக ஜமாபந்தி: கிராம மக்கள் கோரிக்கை மனு

மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள கிராமங்களுக்ரு 2-ஆவது நாளாக வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது.
மதுராந்தகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி.
மதுராந்தகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி.
Updated on
1 min read

மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள கிராமங்களுக்ரு 2-ஆவது நாளாக வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது.
மதுராந்தகம் வட்டத்துக்கு உள்பட்ட முன்னங்குளம், முருங்கை, சிறுதாமூர், மதூர், பின்னம்பூண்டி, விளாங்காடு, ராவுத்தநல்லூர் உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது, புதிய ரேஷன் கார்டு, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் தீர்வாய அலுவலர் பி.பரமசிவத்திடம் 128 மனுக்கள் அளிக்கப்பட்டன. அதில் ஒரு மனுவுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்றவை துறை ரீதியான நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் கற்பகம், வட்ட வழங்கல் அலுவலர் தனலட்சுமி, துணை வட்டாட்சியர்கள் துரைராஜ், பிரகாஷ், தனி வட்டாட்சியர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூரில்: ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உள்பட்ட படப்பை, செரப்பணஞ்சேரி, மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம், வல்லம், தண்டலம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 குறுவட்டங்களுக்கான ஜமாபந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாளான வியாழக்கிழமை செரப்பனஞ்சேரி குறுவட்டத்துக்கு ஜமாபந்தி நடைபெற்றது. இதில், செரப்பனஞ்சேரி, ஆரம்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு 121 மனுக்களை அளித்தனர். அவற்றில், 5 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன் பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com