காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட மாதாந்திர விவசாயிகள்குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) காலை 10
மணியளவில், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத் துறை, பொதுப்பணித்துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட விவசாயம்
சார்ந்த அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காண உள்ளனர்.
எனவே இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.