சுடச்சுட

  

  கார் மீது மோதிய பைக் தீப்பிடித்தது: வங்கி அலுவலருக்கு தீக்காயம்

  By DIN  |   Published on : 15th June 2018 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செங்கல்பட்டு அருகே கார் மீது பைக் மோதிய விபத்தில், அந்த பைக் தீப்பிடித்து எரிந்தது. இதில், பைக்கை ஓட்டி வந்த தனியார் வங்கி அலுவலர் தீக்காயம் அடைந்தார். காரில் வந்த 2 பேர் தப்பியோடி விட்டனர். 
  காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அசோக் (28), செங்கல்பட்டில் உள்ள தனியார் வங்கியில் காசாளராகப் பணியாற்றுகிறார். அவருக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணமாகி ஜமுனா என்ற மனைவி உள்ளார். 
  இந்நிலையில், அசோக் கடந்த புதன்கிழமை வழக்கம் போல் வங்கிப்பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புலிப்பாக்கம் செல்லும் மேம்பாலத்தின் மீது அவர் சென்றார். அப்போது எதிரில் செங்கல்பட்டை நோக்கி வேகமாக வந்த கார் அவரது பைக் மீது மோதியது. இதில், பைக் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இவ்விபத்தில் சிக்கி, பைக்கில் பயணித்த அசோக் தீக்காயம் அடைந்தார். அவரை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக அவர் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
  இதனிடையே, அசோக்கின் பைக் மீது மோதிய காரில் வந்த 2 பேர் தப்பியோடி விட்டனர். இவ்விபத்து குறித்த தகவலறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். எனினும், அந்த பைக் முழுவதும் எரிந்து நாசமாகி விட்டது. இவ்விபத்தில், பைக் மீது மோதிய காரின் முன்பகுதியும் சேதமடைந்தது. 
  இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியது: விபத்து நிகழ்ந்த மேம்பாலம் ரூ. 27 கோடியில் கட்டப்பட்டது. எனினும், மேம்பாலத்தில் நடுத்தடுப்பு இல்லை. இதனால் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயற்சிக்கும்போது இதுபோன்ற விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேம்பாலத்தில் நடுத் தடுப்பு அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai