சுடச்சுட

  

  மானாம்பதி அரசுப்பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு

  By DIN  |   Published on : 15th June 2018 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  awarnes

  மானாம்பதி அரசு தொடக்கப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  மத்திய அரசு சார்பில் கிராமப்புற மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தனிநபர் இல்லக் கழிவறை, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், ஊராட்சி சுற்றுசூழல் மேலாண்மை, திரவக் கழிவு மேலாண்மைத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு
  வருகின்றன. 
  இத்திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து கிராமப்புற மக்களுக்கு கொண்டு செல்ல கிராம அளவிலும், வட்டார அளவிலும் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவைகள் மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்த மானாம்பதி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிச்சாமி, ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். 
  நிகழ்ச்சியில் தன் சுத்தம் பேணிக் காத்தல், சுற்றுப்புறத் தூய்மை, மரம் வளர்த்தல், மழை நீரை சேகரித்தல், குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குதல், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், தனி நபர் இல்லக் கழிவறை அமைப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, தூய்மை இந்தியா, முழு சுகாதாரத் தமிழகமாக மாற்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கிராமப்புறப்பகுதியில் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கழிப்பறை இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன. 


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai