Enable Javscript for better performance
வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் ஆனி உத்திரப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் ஆனி உத்திரப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

    By DIN  |   Published on : 16th June 2018 11:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வழக்கறுத்தீஸ்வர் கோயில் ஆனி உத்திரப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர்-பராசரேசுவரர் திருக்கோயிலில் ஆனி உத்திரத் திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில், அரசியல் கட்சி பிரமுகர்கள், பக்தர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    வரும் 25ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தில் பல்வேறு விசேஷ உற்சவங்கள் நடத்தப்படவுள்ளன. அதன்படி, சூர்யப் பிரபை, பூத வாகனம், நாக வாகனம், அதிகார நந்தி, மஹா ரதம், திருப்பல்லக்கு புறப்பாடு, தீர்த்தவாரி உள்ளிட்டவை காலையிலும், சந்திரப் பிரபை, ரிஷப வாகனம், குதிரை வாகனம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகிய விசேஷ நிகழ்வுகள் அடுத்தடுத்த நாள்களில் இரவு வேளையிலும் நடைபெறவுள்ளன. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் வரும் 20ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது.
    இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறையினர், கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai