Enable Javscript for better performance
அண்ணா உயிரியல் பூங்காவில் உதவி வரைவாளர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    அண்ணா உயிரியல் பூங்காவில் உதவி வரைவாளர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

    By  காஞ்சிபுரம்,  |   Published on : 24th March 2018 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரைவாளர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
     அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் அலுவலகத்தில் உதவி வரைவாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து ஏப்ரல் 15 மாலை 5.45-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இனச்சுழற்சி அடிப்படையில் ஒரு பொது (முன்னுரிமை பெற்றவர்) காலிப் பணியிடம் உள்ளது. இதற்கான வயது வரம்பில், 2017 ஜூலை 1-ஆம் தேதியன்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
     பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினராக இருந்தால் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். சிவில் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு, ரூ. 19,500-62000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்துக்கான நிபந்தனைகள், விண்ணப்பதாரர் தங்களின் விண்ணப்பத்தினை வெள்ளைத் தாளில் எழுதி புகைப்படத்துடன் பெயர், முகவரி, கல்வித் தகுதி, இனம் ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும். இதற்கென விண்ணப்பப் படிவம் ஏதும் வழங்கப்பட மாட்டாது. கல்வித் தகுதி சான்றிதழ்கள், முன்னுரிமைக்கான நகலினையும், சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும்.
     பரிசீலனையில் விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறென கண்டறியப்பட்டால், அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
     விண்ணப்பங்களை ஏப்ரல் 15- ஆம் தேதி மாலை 5.45-க்குள், துணை இயக்குநர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர், சென்னை- 48 எனும் முகவரிக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
     குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். அஞ்சலக தாமதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்தவொரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்துக்கு உண்டு. தேர்வு அழைப்புக் கடிதம் பெறுவது மட்டும் வேலைக்கான உத்தரவு எனக் கருதக்கூடாது. தேர்வுநாள், தேர்வு நேரம் மாறுதலுக்குள்பட்டது. தேர்வுக்கு வரும் நபர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது என அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா துணை இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai