Enable Javscript for better performance
அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக சார்பில் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பந்தல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
     ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தண்ணீர் பந்தல்களை திறந்துவைத்தார்.
     இந்நிகழ்ச்சிகளில் அமைப்பு செயலாளர்கள் சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றியச் செயலாளர் முனுசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செந்தில்ராஜன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சிவகுமார், ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் ராமசந்திரன், வெங்காடு முன்னாள் தலைவர் உலகநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பாபு, பாலமுருகன், ஸ்ரீபெரும்புதூர் நகரச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai