Enable Javscript for better performance
"ஆட்சிமொழி தமிழில் அலுவலகக் கோப்புகள் அமைய வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "ஆட்சிமொழி தமிழில் அலுவலகக் கோப்புகள் அமைய வேண்டும்'

    By  காஞ்சிபுரம்,  |   Published on : 24th March 2018 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆட்சி மொழியாகிய தமிழில் அலுவலகக் கோப்புகள் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பா.முருகேசன் பேசினார்.
     தமிழக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட ஊராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ் ஆட்சி மொழிப் பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     இந்த பயிலரங்கத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது தொடங்கி வைத்தார். இதில், ஆட்சி மொழி, வரலாறு, சட்டம், ஆட்சிமொழி செயலாக்கம், அரசாணைகள், மொழிப் பயிற்சி, மொழி பெயர்ப்பு, கலைச் சொல்லாக்கம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழி ஆய்வு-குறைகளைவு நடவடிக்கைகள் குறித்து, நூற்றுக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
     ஆட்சிமொழிக் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பா.முருகேசன் தலைமை வகித்து, கடந்த 2015-ஆம் ஆண்டுக்கான ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகத்துக்கு கேடயம், சான்றிதழ், சிறந்த வரைவுகள்-குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ் ஆகியவற்றை வழங்கிப் பேசினார். அப்போது, அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாகிய தமிழில் கோப்பு நடவடிக்கைகள் அமைய வேண்டும். அதுபோல், ஆண்டுதோறும் நடத்தப்
     படும் இந்த பயிலரங்கத்துக்கு அனைவரும் சுயவிருப்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.
     தொடர்ந்து, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு, தமிழ்வளர்ச்சித் துறை, வணிகர்களாகிய தங்களையும் அழைத்து கௌரவித்ததற்கு நன்றி தெரிவித்தார். அதோடு, வணிக நிறுவனப் பெயர் பலகைகளில் அனைவரும் தமிழிலேயே பெயர்ப் பலகை வைக்க வலியுறுத்தி வருவதாக கருத்துரையாற்றினார். இதையடுத்து, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா அறிவு வளர்ச்சி மன்றத் தலைவர் கவிஞர் கூரம் துரை, தமிழ் வளர்ச்சி துறையால் தமக்கு பேரறிஞர் அண்ணா விருது கிடைக்கப்பெற்றது. தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என்றார்.
     தொடர்ந்து, இப்பயிலரங்கில் கலந்துகொண்ட அனைத்து அலுவலகங்களுக்கும் அம்மா மென்தமிழ் சொல்லாளர் குறுந்தகடு வழங்கப்பட்டது. நிறைவாக, புலவர் ப.ஆறுமுகம் நன்றியுரையாற்றினார்.
     இப்பயிலரங்கத்தை, காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்வளர்ச்சி துறை உதவி இயக்குநர் க.பவானி ஒருங்கிணைத்தார். இதில், அரசு அலுவலர்கள், ஊழியர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai