Enable Javscript for better performance
இளம் கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த நிதியுதவி ஏப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    இளம் கலைஞர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த நிதியுதவி ஏப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

    By  காஞ்சிபுரம்  |   Published on : 24th March 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கலை நிகழ்ச்சிகள் நடத்த இளம் கலைஞர்களுக்கு நிதியுதவி பெற வரும் ஏப்ரல் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
     தன்னார்வக் கலை நிறுவனங்களின் வாயிலாக இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, கதாகாலட்சேபம், நாகசுரம், தனி வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் ஆகிய இசைக் கருவி கலைஞர்களுக்கும், பக்தவாத்தியங்களான வயலின், மிருதங்கம், கஞ்சிரா, கடம், முகர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்திட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதற்கு, 2018, மார்ச் 1-ஆம் தேதிப்படி, 16 வயது நிரம்பியவராகும், 30 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மேடையில் தனித்து நிகழ்ச்சி நடத்தும் அனுபவம் மிக்கவராக இருத்தல் வேண்டும். இதில், நேர்முகத் தேர்வுக்கு வருவதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. ஏற்கெனவே, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள் மீண்டும் அதே பிரிவின் கீழ் நிகழ்ச்சி நடத்திட வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள் சுய முகவரியிட்ட உறையில் ரூ. 10க்கான தபால் தலையை ஒட்டி, உறுப்பினர்-செயலர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், 31, பொன்னி பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை- 600028 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 044-24937471 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
     பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ, தபால் மூலமோ வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai