Enable Javscript for better performance
காசநோய் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை, சன்மார்க்க சங்கம் மற்றும் லுக்மான் அஜ்மல் பாரா மெடிக்கல் இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து மதுராந்தகத்தில் மாணவ மாணவிகள் பங்கேற்ற காசநோய் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை முன்பிருந்து தொடங்கி இப் பேரணியை மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆறுமுகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள் காசநோய்) செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகி ஜான்பாட்ஷா, கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், சன்மார்க்க சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai