Enable Javscript for better performance
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் தீக்கிரை- Dinamani

சுடச்சுட

    

    குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் தீக்கிரை

    By  செங்கல்பட்டு,  |   Published on : 24th March 2018 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடுவாஞ்சேரி டிஎஸ்பி அலுவலகம் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீரென தீபிடித்து எரிந்தன.
     காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட வண்டலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தின் பின்புறம் இயங்கி வருகிறது.
     இங்கு டிஎஸ்பி அலுவலகம் அமைவதற்கு முன்பாக இது காவல் நிலையம் இயங்கி வந்தது.
     கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வேன், ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள்கள் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் டிஎஸ்பி அலுவலகப் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
     இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் டிஎஸ்பி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 3 ஆட்டோக்கள் தீபிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் டிஎஸ்பி அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து டிஎஸ்பி வளவன் அளித்த தகவலின்பேரில் தீயணைப்புத்துறை வருவதற்குள் தீ மளமளவென தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. போலீஸாருடன்பொதுமக்கள்இணைந்து அருகில் இருந்த வீடுகளில் இருந்து வாளி, குடங்களில் தண்ணீரைக் கொண்டுவந்து கொளுந்து விட்டு எரிந்த வாகனங்கள் மீது ஊற்றி தீயை அணைத்தனர்.
     ஆனால் அருகில் உள்ள மறைமலைநகர் தீயணைப்புத்துறை வீரர்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு காலதாமதமாக வந்ததாகவும், அதற்குள்பொதுமக்கள் முயற்சியால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
     இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் - டிஎஸ்பி அலுவலகம் பின்புறம் வழக்குகள் சம்பந்தப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதாகவும், அதை பேரூராட்சி நிர்வாகம் அள்ளுவதற்கு பதில் குப்பைகள் குவிந்த பின் தீவைத்துகொளுத்தி விடுகின்றனர்.
     அதன்காரணமாகத் தான் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
     இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai