Enable Javscript for better performance
சங்கரா பல்கலை.யில் கணிதப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    உலக கணித தினத்தையொட்டி, சங்கரா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை கணிதப் போட்டிகள் நடைபெற்றன.
     காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 23) உலக கணித தினம் கொண்டாடப்பட்டது.
     இதில், தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து கலந்துகொண்ட மாணவர்களுக்கு கணிதப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியினை, பல்கலை. துறைத் தலைவர் சீனுவாச ராவ் தொடங்கி வைத்தார். வேலூர் தொழில்நுட்ப க் கல்லூரி பேராசிரியை விஜயலட்சுமி சிறப்புரையாற்றினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கணிதத் துறை மாணவி ஹேமவிலாஷினி நன்றி கூறினார்.
     இதில், பல்கலை. அறிவியல் துறைத் தலைவர் பாலாஜி, தேர்வுக் கட்டுப்பாட்டு துறை அலுவலர் வேணுகோபால், ஒருங்கிணைப்பாளர் செங்கமலச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai