Enable Javscript for better performance
தேசிய தொழில்நுட்பக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத்தில் உள்ள ஆதி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தேசிய அளவிலான தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது.
     இதனை, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் பேராசிரியர் மல்லீஸ்வரன், கல்லூரி முதல்வர் தேவராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர். கல்லூரியின் மின்னணு-தொடர்பியல் துறைத் தலைவர் சக்திசுதன் தலைமை வகித்தார். "புரோட்டோகால் எலக்ட்ரானிக்ஸ்" நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் விக்னேஸ்வரன் மாதவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
     இதில், ஆந்திரம், புதுச்சேரி, தமிழகம் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு மின்னணு-தொடர்பியல் தொடர்பான 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாதிரிகளைச் சமர்ப்பித்து, செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில், தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆராய்ச்சி மாதிரிகளுக்கு கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai