Enable Javscript for better performance
மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்: பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்: பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி

    By  காஞ்சிபுரம்,  |   Published on : 24th March 2018 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மது அருந்துவதால் ஏற்படும் தீமைகளைத் தடுக்க, பள்ளி மாணவர்கள் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.
     காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆயத் தீர்வைத் துறையினர் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மதுவிலக்கு அமல்பிரிவு, ஆயத் தீர்வைத் துறை, கல்வித் துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டது.
     இதனை, மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வளாகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
     பேரணியில், பச்சையப்பன், ஆந்திரசன் ஆகிய மேல்நிலைப் பள்ளிகள், பெரியகாஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பி.எஸ்.எஸ். சீனிவாசா நகராட்சி மேல்நிலைப்பள்ளி, நாராயண குரு, விக்டோரியா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியின்போது, மது அருந்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு, முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.
     அதில், "போதை பழக்க அடிமை வாழ்வில் மடமை', "மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு', "குடி குடியை கெடுக்கும் குடிபழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்', "தள்ளி வை, தள்ளி வை போதைப் பொருளை தள்ளி வை', "மதியை கொடுத்து மதுவை ஒழிப்போம்', "தொடாதே தொடாதே போதைப் பொருளை தொடாதே' என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
     இந்நிகழ்ச்சியில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஸ்லாம் பாஷா, மாவட்டக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, கலால் உதவி ஆணையர் எஸ்.நடராஜன், காஞ்சிபுரம் காவல்துறை ஆய்வாளர் லட்சுமிபதி (கலால்). அரசுத் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai