Enable Javscript for better performance
மர்ம விலங்குகள் கடித்து 31 ஆடுகள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மதுராந்தகத்தை அடுத்த சிறுமைலூரில் வியாழக்கிழமை நள்ளிரவு மர்ம விலங்குகள் கடித்ததில் 31 ஆடுகள் இறந்தன.
     செய்யூர் வட்டம், சூனாம்பேடு அருகில் உள்ள சிறுமைலூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், விவசாயி. இவர் தனக்குச் சொந்தமான 31 ஆடுகளை, வியாழக்கிழமை இரவு வீட்டின் பின்புறம் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். நள்ளிரவு ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு கதவைத் திறந்து அய்யனார் பார்த்தார். மர்ம விலங்குகள் ஆடுகளை கடித்து குதறியது தெரிய வந்தது. இதுகுறித்து நெற்குணம் கால்நடை மருத்துவர்கள் ஜவஹர், கோமளவள்ளி ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேரில் சென்று விசாரணை செய்தனர்.
     31 ஆடுகள் இறந்தது குறித்து கால்நடை மருத்துவர் ஜவஹர் தினமணி செய்தியாளரிடம் கூறுகையில், இந்த ஆடுகள் தெரு நாய்கள் போன்ற மர்ம விலங்குகள் கடித்ததில் இறந்துள்ளன. ஆந்த்ராக்ஸ் போன்ற தொற்று நோய்களால் இப்பகுதி கால்நடைகள் பாதிக்கப்படவில்லை. இறந்த 31 ஆடுகளும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai