Enable Javscript for better performance
மேல்கதிர்பூரில் அம்மை நோயால் பலர் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மேல்கதிர்பூரில் அம்மை நோயால் பலர் பாதிப்பு

    By  காஞ்சிபுரம்,  |   Published on : 24th March 2018 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரத்தை அடுத்த மேல்கதிர்பூர் கிராமத்தில் பரவலாக அம்மை நோய் தாக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
     கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக காஞ்சிபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. கோடைக்காலத்தில் காற்று, நீரின் மூலம் பரவக்கூடிய வைரஸ் கிருமியால் அம்மை நோயும் தற்போது கிராமப் பகுதிகளில் பரவி வருகிறது.
     மேல்கதிர்பூர் கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோர் அம்மை நோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் மருத்துவ உதவியின்றி அவதிப்படுகின்றனர்.
     இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோடைக்காலத்தில் வழக்கமாக சின்னம்மை நோய் தாக்கம் ஏற்படும். குழந்தைகள், பெரியவர்களுக்கு முறையான தடுப்பூசி போடப்பட்டிருந்தால் இந்நோய் வராமல் தடுக்கலாம்.
     இருப்பினும், நோயின் தாக்கம் உள்ள கிராமப் பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai