Enable Javscript for better performance
அமமுக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மாமல்லபுரம் நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் அம்பாள் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மால்லபுரம் நகர அவைத் தலைவர் ஜி.ரங்கசாமி, செயலாளராக எம்.கண்ணன், பொருளாளராக பி.தண்டபாணி, இணைச் செயலாளர்களாக எஸ்.கோகிலா, இ.ரகு, துணைச் செயலாளர்களாக பி.அனுசுயா, இ.டில்லிபாபு, பி.சாமுவேல் ஆகியோரும், 15 வார்டுகளுக்கான புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டனர். 
    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளரும், திருப்போரூர் தொகுதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான எம்.கோதண்டபாணி, புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். 
    கூட்டத்தில், மாவட்டப் பொருளாளர் ஜெ.கே.பாபு, ஒன்றிய நிர்வாகிகள் களத்தூர் சுந்தரம், கணபதி , பையனூர் சேகர், ஆலை வர்மன், ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai