Enable Javscript for better performance
'காவிரி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக மக்களை ஏமாற்றும் செயல்'- Dinamani

சுடச்சுட

    

    'காவிரி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக மக்களை ஏமாற்றும் செயல்'

    By DIN  |   Published on : 31st March 2018 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை விவகாரத்தில் அதிமுக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
    காஞ்சிபுரம் நகர திமுக சார்பில், இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் வணிகர் தெருவில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் க.சுந்தர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றினார். 
    பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் அதிமுக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல். ஏற்கெனவே கர்நாடக அரசு வழக்கு தொடுத்துள்ளது. மத்திய அரசும் ஸ்கீம் என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசும் வழக்கு தொடரும் பட்சத்தில், மூன்று வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து விசாரிக்க வாய்ப்புண்டு. இதனால், காவிரி விவகாரத்தை கிடப்பில் போட வாய்ப்புள்ளது. இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்காது. 
    கூட்டுறவு சங்கத் தேர்தல் மோசடி குறித்து தமிழக ஆளுநர், தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை முறையாக நடத்த வேண்டும். திராவிடம் இடமா, இனமா என ஹெச் .ராஜா விடுத்த சவாலுக்கு எந்த இடத்தில் அழைத்து விவாதிக்கச் சொன்னாலும் விவாதிக்க தயார் என்றார். கூட்டத்தில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai