Enable Javscript for better performance
கிணற்றில் மூழ்கிய பிளஸ் 1 மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கூடுவாஞ்சேரி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த பிளஸ் 1 மாணவர் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தார்.
    கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு தமிழ்செல்வி நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேனின் மகன் நயீம் அக்தர் (15). நந்திவரம் மலைமேடு பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். வியாழக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், அவர் காயரம்பேடு அருகே பாண்டூர் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். 
    அப்போது நயீம் அக்தர் மாயமானதையடுத்து, அவரது நண்பர்கள், கிணற்றில் அவரைத் தேடினர். பின்னர், கிணற்றுக்குள் மூழ்கி மயங்கிய நிலையில் இருந்த நயீம் அக்தரை மீட்டு, பொத்தேரியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நயீம் அக்தர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 
    தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீஸார், நயீம் அக்தரின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, நயீம் அக்தரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai