Enable Javscript for better performance
திருடு போன கச்சியப்பர் சிலை: சர்வதீர்த்த குளத்தில் 5 மணி நேரம் தேடுதல் வேட்டை- Dinamani

சுடச்சுட

    

    திருடு போன கச்சியப்பர் சிலை: சர்வதீர்த்த குளத்தில் 5 மணி நேரம் தேடுதல் வேட்டை

    By DIN  |   Published on : 31st March 2018 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருடு போன கச்சியப்பர் சிலையை காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளத்தில் போலீஸார் வியாழக்கிழமை சுமார் 5 மணி நேரம் தேடினர். சிலை கிடைக்காததையடுத்து போலீஸார் திரும்பிச் சென்றனர். 
    சிவாச்சாரியரான கச்சியப்பருக்கு குமரகோட்டம் முருகன் கோயிலில் 7.47 கிலோ எடையில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, கச்சியப்பர் உற்சவ சிலை கடந்த மார்ச் 10-ஆம் தேதி திருடு போனது. 
    இதுகுறித்து கோயில் செயல் அலுவலரால் சிவகாஞ்சி போலீஸாருக்கு புகார் அளிக்கப்பட்டது. 
    இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், குமரகோட்டம் கோயில் அர்ச்சகர் கார்த்திக், சர்வ தீர்த்த குளத்தில் கச்சியப்பர் சிலை இருப்பதாக அளித்த தகவலின் பேரில், டிஎஸ்பி முகிலன் தலைமையில் வியாழக்கிழமை அங்கு சென்று ஆய்வு நடத்தினர். 
    அதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறை சார்பில் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் சர்வதீர்த்த குளத்துக்குள் மூழ்கி பல்வேறு பகுதிகளில் சிலையை தேடிப்பார்த்தனர். 
    சுமார் 5 மணி நேரம் தேடிய போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் கச்சியப்பர் சிலை சர்வ தீர்த்தக் குளத்தில் இல்லை என உறுதிப்படுத்தினர். அத்துடன், அர்ச்சகரின் தகவல் பொய்யானது எனக்கூறி அவரை எச்சரித்து சென்றனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai