Enable Javscript for better performance
மேக்காவ நாச்சியார் கோயிலில் பால் குட விழா- Dinamani

சுடச்சுட

    
    milk1

    மேக்காவ நாச்சியார் கோயில் விழாவில் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

    பங்குனி உத்தரத்தையொட்டி, மதுராந்தகத்தை அடுத்த கடலூர் கிராமத்தில் உள்ள மேக்காவ நாச்சியார் கோயிலில் பக்தர்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
    செய்யூர் வட்டம், கடலூர்கிராமத்தில் உள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்தரத்தையொட்டி, பால்குட ஊர்வலம் விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடலூர் கிராம சிவன் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மேளதாளம் முழங்க, பால் குடம் ஏந்தி ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். 
    அவர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 
    நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai