Enable Javscript for better performance
மேட்டுப்பாளையம்-வல்லக்கோட்டை இணைப்புச் சாலை சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம்-வல்லக்கோட்டை இணைப்புச் சாலை சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    road

    ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ள மேட்டுப்பாளையம்- வல்லக்கோட்டை இணைப்புச் சாலை.

    பல வருடங்களாக சீரமைக்கப்படாத மேட்டுப்பாளையம்- வல்லக்கோட்டை இணைப்புச் சாலையில் ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 
    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பேருந்து போக்குவரத்து வசதி இல்லாத இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேட்டுப்பாளையம்-வல்லக்கோட்டை இணைப்புச் சாலையைப் பயன்படுத்தி, வல்லக்கோட்டை பகுதிக்கு வந்து ஸ்ரீபெரும்புதூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் கிராம பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கியச் சாலையான மேட்டுப்பாளையம்- வல்லக்கோட்டை இணைப்புச் சாலை கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்படவில்லை. இதனால், தார்ச் சாலை தற்போது ஜல்லிக் கற்கள் சிதறிய நிலையில், மண் சாலையாக காட்சியளித்து வருகிறது. இதனால் இச்சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 
    இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மேட்டுப்பாளையம்- வல்லக்கோட்டை இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என பல வருடங்களாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கியதன் பலனாக கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு சாலையைச் சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. எனினும் பணிகள் தொடங்காததால் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ள இச்சாலையில் செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணியைத் தொடங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனர். 



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai