Enable Javscript for better performance
வழிப்பறி கொள்ளையர் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுராந்தகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    மதுராந்தகத்தை அடுத்த கிளியாற்று பாலம், தனியார் உணவு விடுதி அருகே கடந்த 25-ஆம் தேதி விழுப்புரம் நோக்கி சென்ற காரின் டயர் பழுதாகி நின்று கொண்டிருந்தது. 
    காரை ஓட்டி வந்தவர் பழுது சரி பார்த்துக் கொண்டிருந்த போது, பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது. பின்னர், அவரைத் தாக்கி ரூ. 5 ஆயிரம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 
    இதையடுத்து எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்படி, மதுராந்தகம் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
    இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக காவிதண்டலத்தைச் சேர்ந்த தமிழ்வேந்தன் (23), திம்மாவரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (21) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai