Enable Javscript for better performance
தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    இது குறித்து தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் தமிழறிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தமிழக அரசு விருதுகள், நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், சித்திரை தமிழ்ப் புத்தாண்டை அரசு விழாவாக நடத்தி, சித்திரை விருதுகள் வழங்கிடவும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார். 
    அதன்படி, தமிழ் வளர்ச்சிக்காக அமைப்பு வைத்து பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில், 'தமிழ்ச் செம்மல்' எனும் விருது வழங்கப்படுகிறது. 
    அதோடு, இவ்விருது பெறுபவர்களுக்கு ரூ.25,000 பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதில், மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 32 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். 
    அதன்படி, நிகழாண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு மாவட்டங்களில் தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ் அமைப்பு வைத்து அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
    விருதுக்குரிய விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 
    விண்ணப்பிப்பவர்கள் சுய விவரக் குறிப்புடன் நிழற்படம் இரண்டு, ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் ஜூன் 4ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai