Enable Javscript for better performance
திருநங்கையிடம் பணம், நகைகளை பறிக்க முயற்சித்த 3 இளைஞர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருநங்கையிடம் பணம், நகைகளை பறிக்க முயற்சித்த 3 இளைஞர்கள் கைது

    By DIN  |   Published on : 18th May 2018 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி மேலவலம்பேட்டை பகுதியில் வாகனத்துக்காக காத்திருந்த திருநங்கையிடம் பணம், நகைகளைப் பறிக்க முயற்சித்த 3 இளைஞர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகம் காவல் உட்கோட்டத்தைச் சேர்ந்த போலீஸார் புதன்கிழமை கருங்குழி மேலவலம்பேட்டை அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு திருநங்கைக்கும், 3 இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதைக் கண்டனர். 
    அவர்கள் அனைவரையும் மதுராந்தகம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அந்த இளைஞர்கள், சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரியின் மகன்கள் தீபக் (32), சபரி (29) மற்றும் மதியழகனின் மகன் விக்னேஷ் (22) என்பதும் அவர்கள் மீது மீது சென்னை நகரில் வழிப்பறி, நகை பறிப்பு போன்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவர்கள் புதுச்சேரியில் இருந்து புதன்கிழமை மாலையில் தங்கள் பகுதிக்கு காரி வந்ததும், கருங்குழி மேலவலம்பேட்டை பகுதியில் தனியாக நின்றிருந்த திருநங்கையிடம் பணம், நகைகளைப் பறிக்க முயற்சி செய்தபோது தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்தது.
    இதுபற்றி அந்தத் திருநங்கை போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின், மூன்று இளைஞர்களையும் கைது செய்தார். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai