Enable Javscript for better performance
படப்பையில் பன்றிகள் தொல்லை- Dinamani

சுடச்சுட

    
    dust

    படப்பை  இலாஹி நகர்  பகுதியில்  குப்பைத்  தொட்டி  அருகே  குவிந்து கிடக்கும் குப்பை.

    படப்பை பகுதியில் அதிக அளவில் சுற்றி திரியும் பன்றிகளால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பன்றிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஒரகடம் பகுதியில், சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் பணிபுரியும், வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழலாளர்கள் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். இதனால் படப்பை பகுதி வேகமாக வளர்ந்து வரும் அதே வேளையில், இந்த ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் கடந்த சில வருடங்களில் பல மடங்காக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், படப்பை ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர், இலாஹி நகர், முருகாத்தம்மன்பேட்டை உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் வாரக்கணக்கில் அகற்றப்படாமல் உள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
    மேலும் குப்பை கொட்டப்படும் பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான பன்றிகள் வந்து குப்பைகளைக் கிளறுவதோடு குடியிருப்புப் பகுதிகளில் அவை சுதந்திரமாக சுற்றி வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியது:
    குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பைத் தொட்டிகள் வைத்துள்ளனர். ஆனால் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகத்தினர் வாரக்கணக்கில் அகற்றாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளுக்காக வரும் பன்றிகள் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி வருவதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். எனவே படப்பை ஊராட்சியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தினமும் குப்பைகளை அகற்றவும், பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai