Enable Javscript for better performance
மாணவர்களைச் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களைச் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 18th May 2018 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    awarnes

    கல்பாக்கம், புதுப்பட்டினம் வாயலூர் காரைத்திட்டு பஞ்சாயத்தில் நடைபெற்ற பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி.

    வாயலூர் ஊராட்சிப்பள்ளியில் ஹேண்ட் இன்ஹேண்டு என்ற அமைப்பின் சார்பில் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
    திருக்கழுகுன்றம் ஒன்றியம் கல்பாக்கம் அருகே உள்ள வாயலூர் ஊராட்சியில் இருளர் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லாத மற்றும் இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 
    வாயலூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் கிங் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் வி.செல்வி, கலைக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.செல்வம், இரா.குணசேகரன், உறுப்பினர்கள் செல்வராஜ், சிரில் சுதாகர், ஆறுமுகம், சரஸ்வதி, கீதாலட்சுமி, கோகிலா, தேன்மொழி மற்றம் நெரும்பூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் வி.ஞானசேகரன், சிஆர்பிஎல் தலைவர் ஏ.கே.உமர், ராஜேந்திரன், உதயா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள், மாணவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினர். 
    இதனையடுத்து இருளர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் 5 பேரை காஞ்சிபுரத்தில் உள்ள உறைவிடப் பள்ளியிலும், 7 பேரை மாமல்லபுரம் அருகில் பட்டிப்புலத்தில் உள்ள மத்திய மத்திய அரசு நிர்வகிக்கும் பள்ளியிலும் சேர்ப்பதற்கு அவர்கள் பெற்றோர் ஒப்புதல் அளித்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai