Enable Javscript for better performance
மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர் மாணவர்கள் 95 சதவீதம் தேர்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர் மாணவர்கள் 95 சதவீதம் தேர்ச்சி

    By DIN  |   Published on : 18th May 2018 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 95 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 
    குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
    அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் மேல்நிலைக்கல்வி அளிக்கப்பட்டது. அதன்படி, 3 மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். 
    மீட்கப்பட்ட 22 குழந்தைத் தொழிலாளர் மாணவர்கள் நிகழாண்டில் 22 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர். அவர்களில் 21 பேர் தேர்ச்சி பெற்று 95 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 
    குறிப்பாக, ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் அருண்குமார் 1090 மதிப்பெண்ணும், ஸ்ரீராம் என்ற மாணவர்1,057 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். 
    இந்த இரு மாணவர்களும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர பழுதுநீக்கும் கடையிலிருந்து மீட்கப்பட்டவர்கள். வீட்டு வேலை செய்து மீட்கப்பட்ட பாரதி என்ற மாணவி 1,004 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai