Enable Javscript for better performance
மூதாட்டியிடம் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சோத்துப்பாக்கத்தில் மூதாட்டியை ஏமாற்றி 3 சவரன் நகையை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
    மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (70). அவர் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். 
    இந்நிலையில், கண்ணம்மாள் கடந்த புதன்கிழமை மாலையில் தன் வீட்டுக்கு முன்புறம் உட்கார்ந்திருந்தார். அவர் தனியாக இருப்பதை உணர்ந்த மர்ம ஆசாமி ஒருவர் குடிக்க தண்ணீர் கொடுக்குமாறு கேட்டார். 
    தண்ணீர் எடுக்க கண்ணம்மாள் உள்ளே சென்றபோது பின்னாலேயே அந்த நபரும் சென்றார். அவர் கண்ணம்மாளின் கழுத்தில் இருந்த 3 சவரன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். இது கதொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தேவதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai