Enable Javscript for better performance
வாலாஜாபாத்: ஜமாபந்தி நிறைவு- Dinamani

சுடச்சுட

    
    valajabat

    ஜமாபந்தி நிறைவு நாளில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் எம்.பி., ஆர்.டி.ஓ உள்ளிட்டோர்.


    வாலாஜாபாத் வட்டத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவுபெற்றது. 
    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் கடந்த மே 10 ஆம் தேதி கோட்டாட்சியர் ராஜு தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. 
    இதையடுத்து, பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, நலிந்தோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, மே 17 ஆம் தேதி ஜமாபந்தி நிறைவு பெற்றது. இதில், கோரிக்கை மனுக்கள் அளித்த பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 
    இதனை, காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், கோட்டாட்சியர் ராஜு ஆகியோர் வழங்கினர். 
    இதில், மேற்கு மாவட்ட அதிமுக செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், வட்டாட்சியர் கிரி ராணி, ஒன்றிய செயலாளர்கள் அக்ரி நாகராஜ், தும்பவனம் ஜீவானந்தம், அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் செல்வராஜ், மேற்கு மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் என். ஆர். பழனி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai