உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் : மாநிலத் தேர்தல் ஆணையர் நேரில் ஆய்வு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 
உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் : மாநிலத் தேர்தல் ஆணையர் நேரில் ஆய்வு


உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் ஃபெரோஸ்கான் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வணிக வரி இருப்பறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள், ஆவணங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின், நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் பார்வையிட்டார். 
நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குப்பதிவு, கட்டுப்பாடு இயந்திரங்களில் உரிய எண்ணிக்கையில் உள்ளதா என்பதை துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதோடு, இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள கிடங்குப் பாதுகாப்பு, அங்கு பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பான் கருவிகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனவா? என்பதைப் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகள், வாக்குச் சாவடிகளுக்கான பொருள்களை அவர் பார்வையிட்டார். வாக்குப் பெட்டிகள் வாக்குச்சாவடிகளுக்கு உரிய எண்ணிக்கையில் உள்ளனவா? எனக் கேட்டறிந்து தேவையான அனைத்து பொருள்களையும் தயார்நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார். 
மேலும், தேர்தலுக்கான சட்டமுறைப் படிவங்கள், சட்டமுறையற்ற படிவங்கள், தேர்தலுக்கான வாக்குச் சாவடிப் பொருள்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். தேவைக்கு அதிகமான படிவங்கள் மற்றும் பொருள்கள் இருந்தால் மிகுதியாக உள்ள பொருள்களை தேவைப்படும் பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், தேர்தல் ஆணைய உதவி இயக்குநர் (மறுவரையறை) ஏ.கே.சம்பத்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆனந்தன், நேர்முக உதவியாளர் (தேர்தல்) கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com